முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டென்ஷன் வாராமல் தடுக்க...

டென்ஷன் வராமல் தடுக்க   இன்றைய கால கட்டத்தில் மனிதன் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் உடல் நலன் மீது அக்கறை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ஓடுவது அவனுக்காக அல்ல. தன்னைச் சார்ந்தவர்களுக்காகத்தான். இந்த வேகத்தில் அவன் பல்லாயிரக்கணக்கான துன்பங்கள், ஏமாற்றங்கள் என அவனை சூழ்கிறது. அந்த துன்பங்களை எப்படி எளிதாக சமாளிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம். 1.துன்பத்தை வரவிடுங்கள் . துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ளுங்கள். அதைக் கண்டு தூர ஓடாதீர்கள். நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு பயப்படுகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அது உங்களை பயமுறுத்தும். இதனால் துன்பத்தை தீர்க்கும் வழியை கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும். துன்பம் வரும்போதும் வந்தபின்னும் மனதை அந்த துன்பத்திலிருந்து மாற்ற முயலுங்கள்.  உதாரணமாக ; உங்கள் அலுவலகத்தில் உங்கள் தலைமை அதிகாரி ஏதோ ஒரு காரணத்தால் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார் எனில் சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். உங்களுக்கு பிடித்தமான விசயத்தை செய்யலாம். ஆன்மீக புத்தகம் படிக்கலாம் அல்லது ஒரு நிமிடம் உங்கள் மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இப்படி